ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமைகைத்தில் விஜயம்
 

இலங்கையின் ரஷிய குடியரசு தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி மஹய்லோவ்ஸ்கி அவர்கள் இன்று (செப்டம்பர் 19) கடற்படை தலைமைகைத்தில் விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகு அவர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை சந்தித்தார். இவர்கள் இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.