கைது செய்யப்பட்ட 06 இந்திய இழுவைப் படகுகள் மீன்டும் அன் நாட்டுக்கு ஒப்படைப்பு
 

இலங்கை கடல் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தினால் கைது செய்யப்பட்டுள்ள 06 மீன்பிடி படகுகள் சீரமைப்பின் பிறகு மீன்டும் நேற்று (செப்டம்பர் 30) அன் நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.

குறித்த படகுகள் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் இந்திய கடலோர காவல்படையின் ‘அபீக்’ கப்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப் பணிக்காக இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரம கழந்துக்கொன்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.