அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் திருகோணமலைக்கு வருகை
 

அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் 2017ஆம் ஆண்டுக்கான கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் (Cooperation Afloat Readiness and Training Exercise – 2017) கலந்துகொள்வதற்காக இன்று (ஒக்டோபர், 02) திருகோணமலை  துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.  

 இரண்டு உலங்குவானூர்திகளை தரையிறக்கும் வசதிகளைக் கொண்ட குறித்த கப்பல், 210மீட்டர் நீளமும் 32 மீட்டர் அகலமும் உடையது. மேலும், இக்கப்பல் குறித்த பயிற்சியினை நிறைவு செய்தபின்னர் எதிவரும் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர், 06) நாட்டை விட்டு புறப்படவுள்ளது.