சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தலைமைத்துவத்தின் அடிப்படையில் 15 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி, இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் இலங்கை சுங்கம் இனைந்து வழங்கிய நிதி பங்களிப்பின், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிருவப்பட்ட 15 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடந்த சில நாட்களில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக  இன்  நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

ரிதிமாலியத்த பகுதியில் செனவிகம, திக்யாய, குடாலுனுக, கெசெல்பொத உதுர, நாகதீப 6 பீ, மொரான ஆகிய கிராமங்களில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் வரிசையில் 220, 180, 170, 210, 240, 210 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன. ஒயாமடுவ விஹாரையில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் குறித்த விஹாரையின் சங்கத்தினர் உட்பட 288 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன. மேலும் கலென்பிந்துனுவெவ ஸ்ரீ கங்காராம விஹாரையின்  நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் குறித்த விஹாரையின் சங்கத்தினர் உட்பட 205 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன.

இராணுவத்திற்காக புல்முடை 27 வது கஜபா ரெஜிமென்ட், முஹுதுபடபத்துவ நன்திகடால் இராணுவ பாதுகாப்பு வழா, வவுனியா இராணுவ சிறப்புப் படை முகாம், மன்னார் 54 வது இராணுவப் படை ஆகிய முகாம்களில் மேலும் 04 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைக்கப்பட்டது. இது மூலம் வரிசையில் 700, 520, 670, 740 இராணுவ உறுப்பினர்கள் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன. மேலும் மெதவச்சிய, வல்பொல, கிராமத்தில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் 130 குடும்பங்களும் அனுராதபுரம் டி.எஸ். சேனநாயக்க முதன்மை பாடசாலையின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பாடசாலையின் 2347 குழந்தைகள் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன.

இது வரை  பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் 123,109 குடும்பங்களுக்கும், 89,537 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மற்றும் 3,605 இராணுவத்தினருக்கும்  கடற்படையினறால் சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். மேலும், சிறு நீரக நோய் பரவளாக காணப்பட்ட பிரதேசங்களில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.