சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தலைமைத்துவத்தின் அடிப்படையில் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் இலங்கை கடற்படை இனைந்து வழங்கிய நிதி பங்களிப்பின், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்று மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக  இன்  நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது

அதின் பிரகாரமாக ஹம்பெகமுவ, குகுல்கடுவ கிராமத்தில் மற்றும் மொனராகலை நாலன்தா இளநிலைக் கல்லுரியின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைக்கும்  நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவருடைய அழப்பின் பேரில் ஜனாதிபதி திட்ட இயக்குநர் (ஊவா) ஏ ஜி ஜகத் புஷ்பகுமார அவர்கள் கழந்துக்கொன்டார். மேலும் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிஙக அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் இன் நிகழ்வில் கழந்துகொன்டனர். குகுல்கடுவ கிராமத்தில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 280 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன. நாலன்தா இளநிலைக் கல்லுரியில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பாடசாலையில் 150 மானவர்கள் மற்றும் அப் பகுதி 220 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன.

இது வரை  பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ள 277 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் 123,609 குடும்பங்களுக்கு மற்றும் 89,687 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கடற்படையினறால் சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். மேலும், சிறுநீரக நோய் பரவளாக காணப்பட்ட பிரதேசங்களில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.