மேலும் 05 வெளிநாட்டு கடற்படை பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 எட்டாவது சர்வதேச கடல்சார் மாநாட்டுக்கு இனையாக 05 வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் இன்று (ஒக்டோபர் 09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர். அதின் பிரகாரமாக மியான்மர், பிஜி, கொரியா, பிரித்தானிய மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் படை பிரதானிகள் கடற்படைத் தளபதியை சந்தித்தனர். அங்கு வெளிநாட்டு கடற்படை பிரதானிகளுடன் கடற்படைத் தளபதி பல பரஸ்பர முக்கிய காரனங்கள் பற்றி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

மியன்மார் கடற்படையின் கொமாடோர் நே வின், பிஜி கடற்படை தளபதியான கேப்டன் ஹம்பரி தவாகெ, தென் கொரிய குடியரசின் கடற்படை ஆய்வாளர் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு குழுவின் தளபதி ரியர் அட்மிரல் லீ சேன்க் ஹனக், பிரித்தான்ய ஆயுதப்படை சட்ட ஆலோசகர் திரு ஜெப்ரி பிலகட் மற்றும் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடல்சார் கட்டளை மற்றும் ஊழியர் கல்லூரியின் துணைத் தலைவர் ரியர் அட்மிரல் சுனிசி ஹடானொ ஆகியோர் கடற்படைத் தளபதியவர்களை சந்தித்தனர்.

மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தலுக்கு மிகவும் முக்கியமான புதிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை உலகம் முழுவதும் பரவி இருக்கும் கடல்சார் நிபுணர்கள் மற்றும் கடற்படை மூலோபாயம் இயற்றுபவர்கள் விவாதிக்க இந் கருத்தரங்கு முலம் சிறந்த வாய்ப்பை வழங்கியதாக அவர்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

கடற்படைத் தளபதி மற்றும் மியன்மார் கடற்படையின் கமாடோர் நே வின் அவர்கள்

 

 

 

 

 

கடற்படைத் தளபதி மற்றும் பிஜி கடற்படை தளபதியவர்கள்

 

 

 

 

 

கடற்படைத் தளபதி மற்றும் கொரிய குடியரசின் கடற்படை ஆய்வாளர் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு குழுவின் தளபதி

 

 

 

 

 

கடற்படைத் தளபதி மற்றும் பிரித்தான்ய ஆயுதப்படை சட்ட ஆலோசகர்

 

 

 

 

 

கடற்படைத் தளபதி மற்றும் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடல்சார் கட்டளை மற்றும் ஊழியர் கல்லூரியின் துணைத் தலைவர்