வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் 07 பெர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 எட்டாவது சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற 07 வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று (ஒக்டோபர் 10) காலையில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர். அதன்படி, பிரான்ஸ், இத்தாலி, இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், சுவிட்சர்லாந்து மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் படை பிரதானிகள் இவ்வாரு கடற்படை தளபதியை சந்தித்தனர்.  இச் சந்திப்பு காலி முகத் ஹோட்டலில் நடைபெற்றத்தக குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் கூட்டு இராணுவ தளபதி ரியர் அட்மிரல் டிடியர் பேடன், இத்தாலிய கடற்படை துணைத் தளபதி திட்டமிடல், செயல்பாடுகள் மற்றும் கடல் மூலோபாய துறையின் மூத்த கேப்டன் சில்வியோ வெடோன், இந்திய கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் கம்பீர் சிங், இந்திய ஐக்கிய சேவைகள் அமைப்பின் உறுப்பினர், வைஸ் அட்மிரல் சதிஷ் சோனி (ஓய்வு), பாக்கிஸ்தான் கடற்படை கடலோர பகுதிகளில் பொறுப்பான தளபதி ரியர் அட்மிரல் அப்துல் அலீம் அவர்கள், வங்காளம் கடற்படையின் துனை வழங்கல் அதிகாரி ரியர் அட்மிரல் மொஹோமட் லொக்மனர் ரஹுமான், இந்தியாவில் சுவிஸ் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் கிஸ்டொப் கர்ஸ் மற்றும் சீசெல்ஸ் கடலோரக் காவல்படை தளபதி கர்னல் சய்மன் டயின் ஆகியோர் இவுவாரு கடற்படைத் தளபதியை சந்தித்துள்ளனர்.

அங்கு, அவர்கள் இடையில் கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்பு உறவு மற்றும் நட்பை அதிகரித்தல் பற்றி மற்றும் கடல் பாதுகாப்பை நிறுவுவது உட்பட சில முக்கியமான கருத்துகள் பற்றி கலந்துரையாடப்பட்டத்துடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன

கடற்படைத் தளபதி மற்றும் பிரான்சில் கூட்டு இராணுவ தளபதி
 

 

கடற்படைத் தளபதி மற்றும் இத்தாலிய கடற்படை துணைத் தளபதி திட்டமிடல், செயல்பாடுகள் மற்றும் கடல் மூலோபாய துறையின் மூத்த கேப்டன்

 

கடற்படைத் தளபதி மற்றும் இந்திய கடற்படைத் துணைத் தளபதி

 

கடற்படைத் தளபதி மற்றும் இந்திய ஐக்கிய சேவைகள் அமைப்பின் உறுப்பினர்

 

கடற்படைத் தளபதி மற்றும் பாக்கிஸ்தான் கடற்படை கடலோர பகுதிகளில் பொறுப்பான தளபதி

 

கடற்படைத் தளபதி மற்றும் வங்காளம் கடற்படையின் துனை வழங்கல் அதிகாரி

 

கடற்படைத் தளபதி மற்றும் இந்தியாவில் சுவிஸ் பாதுகாப்பு ஆலோசகர்

 

கடற்படைத் தளபதி மற்றும் சிசெல்ஸ் கடலோரக் காவல்படை தளபதி