22 வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்
 

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இன்று முதல் (ஒக்டோபர், 26) செயற்படும் வண்ணம் புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்பிரகாரம், அவர் தனது நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களிடமிருந்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (ஒக்டோபர், 25) பெற்றுக்கொண்டார்.

வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் அனுராதபுர மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்றார். திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் 11 வது ஆட்சேர்ப்பில் கடற்படை பயிலுனர் அதிகாரியாக இணைந்து தனது ஆரம்ப கட்ட பயிற்சிகளை பெற்றுக்கொண்டார். பின்னர் சிறந்த கடற்படை பயிலுனர் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பிரித்தானிய ரோயல் கடற்படை கல்லூரியில் (1984-1985) சர்வதேச இடைநிலை அதிகாரிகள் பாடநெறியினை பயிலுவதற்காக தெரிவு செய்யப்பட்டார்.

வைஸ் அட்மிரல் ரணசிங்க அவர்கள், எதிரிகளுடன் நேருக்கு நேர் போராடியதற்காக வீர விக்ரம விபுஷணய மற்றும் ரண விக்ரம பதக்கம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு கடற்படைத் தளபதியாக நியமிக்கபட முன் தலைமை பணியாளராக இரண்டு வருடங்கள் பணியாற்றிய சிறந்த கடற்படை வீரராவார். மேலும் இதுக்கு முன் பல்வேறு கப்பல்களில் மற்றும் நிருவனங்களில் கட்டளை அதிகாரியாகவும் கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம், தெற்கு மற்றும் மேற்கு கடற்படை கட்டளைகளின் தளபதி ஆகிய பல தூரைகளில் பணியாற்றினார்.