இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க கடமையேற்பு
 

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம் இன்று (ஒக்டோபர் 26) காலை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ஓய்வு பெற்றுச் செல்லும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா கடற்படைத் தளபதிகள் சம்பிரதாயமுறையில் பயன்படுத்தும் வாளை புதிய தளபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.. இதுக்கு இணையாக புதிய கடற்படைத் தளபதி அவர்களுக்கு சிறப்பு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சர்வமத ஆசிர்வாதத்திற்கு மத்தியில் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க சுபவேளையில் முதலாவது ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் குறித்த நிகழ்வுக்காக இவரின் மனைவி திருமதி சந்தியா ரணசிங்க அவரின் மகள் சுபுனி ரணசிங்க ஆகியோர் உட்பட கடற்படை கட்டளைகளின் தளபதிகள், கடற்படை இயக்குனர் ஜெனரல்கள், கொடி அதிகாரி வெளியீடு கட்டளை, திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் கழந்து கொன்டனர்.

வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் அனுராதபுர மத்திய கல்லூரியில் கல்விகற்றார். 1982 ஆண்டில் நவம்பர் மாதம் 15ம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் 11 வது ஆட்சேர்ப்பில் கடற்படை பயிலுனர் அதிகாரியாக இணைந்து தனது ஆரம்ப கட்ட பயிற்சிகளை பெற்றுக்கொண்டார். பின்னர் சிறந்த கடற்படை பயிலுனர் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பிரித்தானிய ரோயல் கடற்படை கல்லூரியில் (1984-1985) சர்வதேச இடைநிலை அதிகாரிகள் பாடநெறியினை பயிலுவதற்காக தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை கடற்படையின் 22வது கடற்படைத் தளபதியாக நியமிக்கபட முன் வைஸ் அட்மிரல் ரணசிங்க அவர்கள் தலைமை பணியாளராக பணியாற்றினார்.