மூன்று இந்தியக் கப்பல்கள் இலங்கை வருகை
 

அண்மையில் (நவம்பர், 02) இந்தியாவின் இரண்டு கடற்படை கப்பல்கள் உட்பட கடலோரப் பாதுகப்பு படை கப்பல் ஒன்றும் இலங்கை வந்துள்ளன. கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத்தந்த இந்திய கப்பல்களான “திர்”, “சுஜாதா” மற்றும் “சாரதி” ஆகிய கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்.

மேலும், இக்கப்பல்களில் வருகை தந்த சிப்பந்திகள் இங்கு தரித்திருக்கவுள்ள நாட்களில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.