சீன கடற்படை கப்பல் கி ஜி குஆன்க் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு சீன கடற்படை கப்பல் கி ஜி குஆன்க் இன்று (நவம்பர் 10) இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன. குறித்த நிகழ்வுக்காக சீன தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கையில் வசிக்கும் பல சீனவர்களும் கழந்துக்கொன்டனர்.

மேலும், 05 நாட்கள் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின் சிப்பந்திகள் தொழில் திறமைகளை பரிமாறுதல் மற்றும் நட்பு வலுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை, குறித்த கப்பல் இம்மாதம் (ஒக்டோபர்) 14 ஆம் திகதி புறப்படவுள்ளது. இவ் ரோந்துப் கப்பல் 163.5 மீட்டர் நீளமும் 22.2 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.