சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது
 

கடற்படையினறுக்கு கிடைக்கப்பட்ட தகவல்கலின் படி கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.

அதன் பிரகாசமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் கடந்த நவம்பர் 06 ஆம் திகதி சட்டவிரோதமான வலைகள் (சுறுக்கு) பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கின்னியா கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, 200 மீட்டர் நீலமான ஒரு சட்டவிரோதமான வலை, ஒரு ஜோடி நீர் முழ்கி காலனிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேக நபர்கள், படகு மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முத்தூர் கடற்றொழில் அலுவலகத்திக்கு ஒப்படைக்கப்பட்டது.

கடற்படையினருக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மற்றும் சிலாவதுர பொலிஸார் இனைந்து கடந்த நவம்பர் 07 ஆம் திகதி மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது சட்டவிரோதமான வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 மீனவர்கள் சவாரிபுரம் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, 8 ஜேலட்நடை குச்சிகள், 8 மின்சார அல்லாத டெடனேடர்கள் மற்றும் 8 வெடிநூல் துண்டுகள் கைப்பற்றப்பட்டன. குறித்த சந்தேக நபர்கள், படகு மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவதுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடற்படயினருக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது அப்பில் ட்ரோமடோல் வகையில் 544 மாத்திரைகள் உடன் இருவர் (2) திலைநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாத்திரைகள் போதைக்காக பயன்படுத்தப்படும். இது விற்பனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேக நபர்கள், மாத்திரைகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் கடந்த நவம்பர் 09 ஆம் திகதி சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு மீனவர் பாலியாரு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, 500 மீட்டர் நீலமான ஒரு சட்டவிரோதமான வலை கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேக நபர்கள், படகு மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் அலுவலகத்திக்கு ஒப்படைக்கப்பட்டது.