சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

பல பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (டிசம்பர் 11) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

அதன் படி தென்கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களால் பானம, உகந்தை மற்றும் பொத்துவில், கோமாரி ஆகிய பகுதிகளில் வைத்து சட்டவிரோதமான சிங்கிறால் பிடியில் ஈடுபட்ட 03 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு படகு சட்டவிரோதமான 02 வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட 21 சிங்கிறால்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இப் காலப்பகுதியில் சிங்கிறால்கள் முட்டைகள் பருவத்தின் காரணமாக இந்த கால கட்டத்தில் சிங்கிறால்கள் பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள், சிங்கிறால்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக பானம பொலிஸ் நிலையத்திடம் மற்றும் பானம உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் ஆனவாசல கடல் பகுதியில் தடுக்கப்பட்ட நீர் முழ்கி நுட்பங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் கைது செய்யப்பட்டது.

மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, 12 ஒக்ஸிஜன் சிலிண்டர்கள், 02 சுழியோடி முகமூடிகள் 02 சோடி சுழியோடி காலணிகள், பிடிக்கப்பட்ட 45 கிலோ மீன்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தலம் துனை மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மீனவர்கள் வலைபாடு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, 85 மீட்டர் நீளமான சட்டவிரோதமான ஒரு வலை கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள், படகுகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பூனகரி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.