கப்பல் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவின் பல நிகழ்வுகள்
 

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவின் கப்பல் தினம் கடந்த டிசம்பர் மாதம் 09 திகதி ஈடுபட்டுள்ளன. அதை முன்னிட்டு கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் துமிந்து அபேவிக்ரம மற்றும் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் சாமர லியனகே அவர்கள் உட்பட பணியாளர்கள் பல திட்டங்கள் மேற்கொன்டுள்ளனர்.

அதன் பிரகாசமாக டிசம்பர் 10 ஆம் திகதி கப்பலில் ஊழியர்களின் குடும்பத்தினர்களுடன் இனைந்து ஏ 543 கப்பலில் கடல் சுற்றுலா பயணம் மற்றும் விளையாட்டு அம்சங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் டிசம்பர் 11 ஆம் திகதி அதிகாரிகள் மற்றும் வீரர்களால் இனைந்து காலி ஸ்ரீ சங்கபோதீ சிறுவர் இல்லத்தில் சிரமதானம் மற்றும் அங்கு வாழும் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கப்பல் தினத்துக்கு இனையாக கப்பலுக்கும் கப்பலின் பணியாளர்களுக்கும் முழு கடற்படைக்கும் காலி கச்சுவத்த பண்டைய விஹாராயாவில் சிறப்பு போதி பூஜா வைத்து ஆசிர்வாதம் அழிக்கப்பட்டது.