சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் 02 பகுதிகளில் வைத்து நேற்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் முல்லிகுழம் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.அங்கு ஒரு படகு, சட்டவிரோதமான 04 வலைகள் பிடிக்கப்பட்ட 10 கிலோ மீன்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தலம் துனை மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கிளிநொச்சி, எருமதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய 1000 மீட்டர் நீளமான சட்டவிரோதமான ஒரு வலை கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நச்சிகுடா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது