பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் 11 வது பட்டமளிப்பு நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு
 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பட்டலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கேற்போர் கூடத்தில் இன்று (டிசம்பர். 13) இடம்பெற்ற 11வது பட்டமளிப்பு விழா நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, விமானப்படை தளபதி, ஏர் மார்ஷல் கபில ஜெயம்பதி, அமைச்சின் அதிகாரிகள் வெளிநாட்டு அதிதிகள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப் பாடநெறி இந்த ஆண்டு ஜனவரி 03 ஆம் திகதி தொடங்கப்பட்டத்துடன் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 23 அதிகாரிகளும் இராணுவத்தைச் சேர்ந்த 65 அதிகாரிகளும், விமானப்படைச் சேர்ந்த 26 அதிகாரிகளும் பங்களாதேஷைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், ருவாண்டா, சூடான், அமெரிக்கா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரியும் தமது கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்து தமது பட்டத்தினை பெற்றுக்கொள்கின்றனர்.