வங்காளம் கடலோர காவற்படையின் இரு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு வங்காளம் கடலோர காவற்படையின் மன்சூர் அலி மற்றும் கமருசமன் ஆகிய இரு கப்பல்கள் இன்று (டிசம்பர் 16) கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன.

இன் நிகழ்வுக்காக இலங்கையில் வங்காளம் உயர் ஆணையர் அதிகாரிகள் பலர் கழந்துகொன்டார். இரு கப்பல்களும் 85 மீட்டர் நீளம் மற்றும் 10.5 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக்கப்பல், 1300 தொன்கள் எடையினை சுமந்து செல்லக்கூடியதும் 89 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்த பின் கப்பல்கலின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் மசுதுல் கரீம் சித்திக் மற்றும் கேப்டன் எந்சனுல்லா ஆகிய அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிராஜ் ஆடிகல அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மேலும், எதிர் வரும் டிசம்பர் 18 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.