முப்பதி ஒன்பது கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வு திருகோணமலையில்
 

இலங்கை கடற்படையின் 54வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 02 அதிகாரிகள், சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 05 அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையின் 56வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 32 அதிகாரிகள் உள்ளிட்ட 39 மிட்சிப்மென்கள் தமது இலங்கை கடற்படை, சமுத்திரவியல் மற்றும் கப்பல் பயணம் உள்ளிட்ட பயிற்சிகளை நிறைவு செய்து அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறும் நிகழ்வு நேற்று மாலை (டிசம்பர், 18) இடம்பெற்றது. திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் நடைபெற்ற கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், இளம் அதிகாரிகளான நீங்கள், உங்கள் முன் உள்ள சவால்களை இம் மதிப்புமிக்க பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட கடுமையான பயிற்சியினை நிரூபிக்கும் வகையில் விடாமுயற்சியுடன் எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்ததுடன் இலங்கை கடற்படையானது யுத்தத்தின் போது மட்டுமல்லாமல் போருக்குப் பிந்தைய சமாதான, நல்லிணக்க மற்றும் தேசிய அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளின் கீழ் தனது காத்திரமான பணிகளை நிரூபித்துள்ளது. எதிர்கால தலைமுறையினருக்காக கடுமையாக போராடிப்பெற்ற சமாதானத்தை தக்கவைத்து கொள்வதற்கான அவசியத்தை வலியுறுத்திய அவர் அதுவே நாட்டு மக்கள் எனும் வகையில் நாம் எமது யுத்த வீரர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன் ஆகும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சமயத்தலைவர்கள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் தளபதி, அதிதிகள், அரச அதிகாரிகள், பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் இளம் அதிகாரிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், பயிற்சியின்போது தமது திறன்களை வெளிக்காட்டிய கடற்படை பயிலுனர் அதிகளுக்கான விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன. அதனடிப்படையில் அனைத்து பயிற்சிநெறிகளிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மிட்சிப்மென் கேஎல் மதுமாதவ இவ் ஆட்சேர்ப்பின் சிறந்த அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டு வாள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மிட்சிப்மென் எஸ்பிவைடிஏ சுபசிங்க பயிற்சி பாடங்கள் மற்றும் தொழில் சார் பாடங்களிலும் மிட்சிப்மென் பிஎச்என் நிரோஷ கடலியல் பாடநெறிகளிலும் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொண்டனர்.

கடற்படை கலாச்சார குழுவால் வழங்கப்பட்ட ஒரு வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சியின் மற்றும் கடற்படை இசை குழுவால் வழங்கிய நிகழ்ச்சியின் பின்னர் கடற்படை மரபுகளுக்கு இணயாக அதிகாரியளிக்கும் நிகழ்வு முடிந்தது.