கடுமமையாக சுகவீனம்முற்ற மீனவரை கடற்படையினர் கரைக்கு கொண்டுவர உதவி
 

அண்மையில் (டிசம்பர், 22) இலங்கை கடற்படையினர், கடுமமையாக சுகவீனம்முற்ற மீனவரை கரைக்குக் கொண்டுவர உதவியுள்ளனர். மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளிற்கிணங்க அதிரடியாக செயற்பட்ட இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதுதல் படகு குறித்த பகுதிக்கு அனுப்பிவைத்தனர்

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பலநாள் மீன்பிடிப்படகின் மூலம் மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களில் ஒருவர் திடீரென நெஞ்சு வலி காரணமாக சுகவீனமுற்றுள்ளார். இதனை அறிந்த இலங்கை கடற்படையின் அதிவேக படகு கல்முனையில் இருந்து சுமார் 03 கடல் மைல் தொலைவில் இருந்த மீனவர் படகினை சென்றடைந்துள்ளது. பின்னர் ஒலுவில் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட குறித்த மீனவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.