பொழுதுபோக்குக்காக சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜனவரி, 06) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் பலபிடிய கடல் பகுதியில் வைத்து நேற்று (ஜனவாரி 06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரேனிய சேர்ந்தவர்களான இவர்களிடம் ஒரு ஸ்பியர் துப்பாக்கி 02 சுழியோடி முகமூடிகள் 02 சோடி சுழியோடி காலணிகள், ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் மீன்பிடி பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அஹுன்கல்ல போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.