சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (ஜனவரி 09) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில்  ஈடுபட்ட 06 மீனவர்கள் வெடிதலதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, 07 சுழியோடி முகமூடிகள், ஒரு ஜிபிஎஸ் இயந்திரம், 05 சட்டவிரோத  வலைகள் உட்பட மீன்பிடி பொறுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள், படகுகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  அடன்பன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.