போலி பணம் நோட்டுகள் அச்சிடைத்த ஒருவர் கடற்படையினர்களால் கைது
 

வழங்கிய தகவலின் படி கடந்த ஜனவாரி 16 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள்  மற்றும் கொழும்பு குற்றவியல் புலனாய்வு துறையின் உத்தியோகத்தர்கள், இனைந்து  ஹொரனை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது போலி  பணம் நோட்டுகள் அச்சிடைத்த வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

அங்கு, ஐந்தாயிரம் ரூபாய் பெருமதியான (5,000.00) மூன்று நோட்டுகள், 124 அமெரிக்க டாலர் (அமெரிக்க $ 100) நோட்டுகள் மற்றும் லேசர் பிரிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர், போலி  பணம் நோட்டுகள் மற்றும்  பொருற்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு குற்றவியல் புலனாய்வு துறையின் உத்தியோகத்தர்களிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.