நேபாள இராணுவ பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (ஜனவரி 18) இலங்கை வந்துள்ள நேபாள இராணுவ பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி அவர்கள் இன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

அவரை கடற்படையின் விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது. அதன் பிரகு அவர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மேலும் ஜெனரல் சேத்ரி அவர்கள்  கடற்படை தளபதி மற்றும்  இயக்குனர்களுடன் ஒரு சமூக புகைப்படத்திற்கும் கழந்துகொன்டார்.