7வது இந்திய மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்
 

வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்திய - இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்றையதினம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. 7வது தடவையாக கொழும்பில் இடம்பெற்ற இப்பாதுகாப்பு கலந்துரையாடலில், கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பியால் டி சில்வா தலைமயிலான இலங்கை குழுவினரும் ரியர் அட்மிரல் திரேன் விக் தலைமயிலான இந்திய குழுவினரும் பங்குபற்றினர்.

குறித்த இச்சந்திப்பில், அயல் நாடுகள் என்ற வகையில் இருநாடுகளினதும் கடற்படையினரிடையே நிலவும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில், இருதரப்பு முக்கியத்துவம் விடயங்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. அத்துடன் இந்து சமுத்திர விவகாரங்களில் இரு தரப்பினரும் பரஸ்பரம் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தொடர்பாகவும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இதேவேளை, இந்திய குழுவிற்கு தலைமை தாங்கும் ரியர் அட்மிரல் திரேன் விக் அவர்கள் அன்றைய தினம் இலங்கை கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்களையும் சந்தித்தார். இச்சந்திப்பு இலங்கை கடற்படைத் தலையகத்தில் இடம்பெற்றது.