ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்
 

அண்மையில் (பெப்ரவரி 16) ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான “ஐஆர்ஐஎஸ் “பயண்டொர்”,” நக்டி” மற்றும் ரொன்ப் ஆகிய மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள குறித்த இக்கப்பல்களை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றுள்ளனர்.

கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்த பின் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கொமான்டர் பெனாம் ஹோசெய்ன் போ, கொமான்டர் மெஹ்தி அஹமத்போ சமானி, கொமான்டர் மொஹமட் பாகர் ரஹ்னமா ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்களை சந்தித்தனர். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மேலும் குறித்த கப்பல்கள் எதிர்வரும் 19ம் திகதி இலங்கைக்கான விஜயத்தினைப் பூர்த்தி செய்து புறப்படமுன்னர், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்திருக்கும் விளையாட்டு மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளனர்.