சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2018” நிகழ்வில் கடற்படை தளபதி பங்கேற்பு
 

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (Council International Military Sports) வருடாந்த “டே ரன் – 2018” நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்கள் இன்று (பெப்ரவரி 18) கலந்து சிறப்பித்துள்ளார். சுமார் 2 கிமீ தூரம் கொண்ட குறித்த ஓட்ட நிகழ்வு காலிமுகத்திடலில் ஆரம்பமாகி கொழும்பு மலே வீதியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் நிறைவுற்றது.

சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு முப்படை தளபதிகள் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற இவ்வருடாந்த “டே ரன் – 2018” நிகழ்வில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், 135 அங்கத்துவ நாடுகளுக்கிடையில் நட்பு மற்றும் தோழமை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் வருடாந்தம் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடுசெகின்றமை குறிப்பிடத்தக்கது.

“விளையாட்னூடாக நட்பு” எனும் குறிக்கோளுக்கு அமைவாக ஆயுத்தப்படையினரை விளையாட்டினூடாக உலக சமாதானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்படுவதே இக்கழகத்தின் பிரதான நோக்கமாகும். இதேவேளை, உலகின் மிகப்பெரிய ஒரு பல்துறை அமைப்புகளில் ஒன்றாக சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.