கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு முதல் விளக்கப்படம் கடற்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டது
 

இலங்கை கடற்படையினர் தனது முதலாவது நீரளவியல் கணக்கெடுப்பு முதல் விளக்கப்படத்தினை தயாரித்துள்ளது. இதற்கமைய அண்மையில் (மார்ச், 09) இடம்பெற்ற நிகழ்வின்போது கச்சதீவை உள்ளடக்கிய புதிய நீரளவியல் கணக்கெடுப்பு விளக்கப்படம் பிரதான நீரளவியலாளர் ரியர் எட்மிரல் சிசிர ஜயகொடி அவர்களால் உத்தியோகபூர்வமாக கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களிடம் கையளித்துள்ளார்.

கடல் பயண பாதுகாப்பு, கடல்சார் சூழல் பாதுகாப்பு, தேசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கடற் பிராந்திய முகாமைத்துவம், கடல்சார் ஆய்வு, கடல் வளங்கள் சுரண்டல், கடல் எல்லை நிர்ணயித்தல், கடல் பாதுகாப்பு மற்றும் கடலோர அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு குறித்த நீரளவியல் கணக்கெடுப்பு நடவடிக்கையானது உறுதுணையாக அமைவதுடன், பிராந்திய கடல்சார் மைய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான நாட்டின் இலக்கை அடைந்து கொள்வதற்க்கு இது பிரதான காரணியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு சேவையின்போது நேரிடும் பாதுகாப்பு, நீரளவியல் மற்றும் புவி-சார்ந்த தகவல், உற்பத்தி மற்றும் சேவைகளை திறம்பட வழங்கும் அதேவேளை, கடல் வாழ் உயிர் பாதுகாப்பினையும் உறுதிசெய்துகொள்ளலாம்.