மிலன் 2018இல் கலந்து கொண்ட கடற்படை கப்பல்களான சமுதுர மற்றும் சுரனிமில நாடு திரும்பின
 

இந்தியாவில் இடம்பெற்ற “மிலன் – 2018” பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படையின் சமுதுர மற்றும் சுரனிமல ஆகிய இரு கப்பல்கள் அண்மையில் (மார்ச், 17) நாடு திரும்பியுள்ளன. இவ்விரண்டு கப்பல்களும் இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை துறைமுகத்திலிருந்து அந்தமான் தீவின் பிளையர் துறைமுகத்தை நோக்கி இம்மாதம் ௦2ஆம் திகதி தமது பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் மிலன் கடற்படை பயிற்சியில் இவ்வருடம் 17 நாடுகளைச்சேர்ந்த 19 கப்பல்கள் சர்வதேச கடல் சார் கருத்தரங்கு, டேபிள் டாப் பயிற்சி, பேண்ட் கச்சேரி, இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், உணவு விழா, காட்டில் உயிர்வாழ்வதற்கான செயல் விளக்கம், சர்வதேச நகர அணிவகுப்பு, பன்முக பயிற்சிகள் மற்றும் மிலன் விருந்து ஆகிய செயற்பாடுகளில் கலந்து சிறப்பித்துள்ளன.

கடல்களுக்கிடையிலான நட்புறவு எனும் தொனிப்பொருளில் குறித்த மிலன் நிகழ்வு இம்மாதம் 06ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை அந்தமான் தீவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறித்த பயிற்ச்சியில் கலந்துகொண்டு கொழும்பு திரும்பிய இக்கப்பல்களை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டுள்ளன.