இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கையளிக்கப்பட்டுள்ளது.
 

அண்மையில் (மார்ச், 22) இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வின்போது, இலங்கை கடற்படைக்காக வரையறுக்கப்பட்ட கோவை கப்பல்தளத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது உயர்ரக ஆழ்கடல் ரோந்துக்கப்பல் வைபவரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தாணிகரும் வரையறுக்கப்பட்ட கோவை கப்பல்தளத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரியர் எட்மிரல் (ஒய்வு) அவர்களால் இலங்கை கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் எட்மிரல், நீல் ரொஸய்ரோ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இக்கபலினை நிர்மாணிக்கும் பணிகள் 2014 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக் கப்பல் மூலம் இலங்கையின் கடல் எல்லையில் ரோந்து நடவடிக்கைகள், தேடுதல், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண செயற்பாடுகள் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். அத்துடன் இக்கப்பல் மூலம் நாட்டின் கடல்சார் சூழல் மாசுருவதை தடுக்கும் பணி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.