சட்டவிரோத, கட்டுப்படுத்தப்படாத மற்றும் தகவலரிவிக்கப்படாத மீன்பிடி தொடர்பான செயலமர்வு
 

சட்டவிரோத, கட்டுப்படுத்தப்படாத மற்றும் தகவலரிவிக்கப்படாத மீன்பிடி தொடர்பான செயலமர்வு அண்மையில் (மார்ச், 24) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலாசாலையில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில், உயர் நீதிமன்ற நீதிபதி, மேல்முறையீட்டு நீதிபதி, பெண் நீதிபதிகள், இலங்கை நீதிபதிகள் சங்கத்தின் நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல் துறையின் நீதிபதிகள், கடற்றொழில் அமைச்சு மற்றும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ரோமில் உள்ள ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய நிறுவன சட்ட அலுவலகத்தின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் கலாநிதி. பியோ மனோஆ மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சர்வதேச சட்டம் அலுவலகத்தின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர், திருமதி ஜோ ஸ்கான்லன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கு சட்டவிரோத, கட்டுப்படுத்தப்படாத மற்றும் தகவலரிவிக்கப்படாத மீன்பிடி தொடர்பாக விரிவான விளக்கமளிக்கப்பட்டது.