பிளாஸ்டிக் கழிவகற்றலில் கடற்படையினரின் புதிய வழிமுறை அறிமுகம்
 

இலங்கை கடற்படையினர் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகிய பொருட்களுக்கான புதிய மீள்சுழற்சி செயல்முறை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளனர். கழிவு முகாமைத்துவத்திற்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினால் மூன்று கட்டங்களைக் உள்ளடக்கியதாக இப்புதிய முறையினை உருவாக்கியுள்ளனர்.

முதற்கட்டத்தில் பூந்தோட்ட அலங்காரங்களுக்காக அலங்காரப் பொருட்களான பூச்சாடிகள், வேலிக் கம்பங்கள் ஆகியன வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கடற்படையினரின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக கடற்படை நலன்புரித்திட்டத்ன் ஊடாக நாடளாவிய ரீதியில் புதிய தொழினுட்பத்தை பகிர்ந்து கொள்ளல், அதனை விரிவுபடுத்தல் மற்றும் முறையான கழிவகற்றல் ஆகிய நடவடிக்கையின் மூலம் அதனை பயன்மிக்க ஒரு சிறந்த வளாமாக பயன்படுத்தல்.

மூன்றாம் கட்ட செயற்பாட்டினை கடற்படை ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான பிரிவின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.