தாய்லாந்து கடற்படையின் மூன்று கப்பல்கள் இலங்கை வருகை
 

ஐந்து நாட்களை கொண்ட பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு மூன்று தாய்லாந்து கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாங்கொக், மகுத்ராஜகுமார்ன் மற்றும் பட்டனி ஆகிய தாய்லாந்து கடற்படை கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்

கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பின் தாய்லாந்து கடற்படையின் கேடட் அதிகாரி பயிற்சி பிரிவில் தளபதி ரியர் அட்மிரல் சொம்போன் புவுஆன்க் அவர்கள் மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் நிவாட் ஜிட்புல்பொல், கொமான்டர் நட்டபொன் சன் கிட்புன் மற்றும் கொமான்டர் நருநாட் பந்கம் ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை சந்தித்தனர். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

அதன் பிரகு குறித்த அதிகாரிகள் கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்களயும் சந்தித்தனர். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மேலும், ஐந்து நாட்கள் தரித்திருக்கவுள்ள இம்மூன்று கப்பல்களின் கடற்படை சிப்பாய்கள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன் குறித்த இக்கப்பல்கள் மூன்றும் இம்மாதம் மாதம் ஒன்பதாம் திகதி புறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Arrival of Royal Thai Naval Ships at port of Colombo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Meeting the Commander Western Naval Area

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Meeting the Chief of Staff