ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் எகெபொனோ கப்பல் இலங்கை வருகை
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் எகெபொனோ எனும் கப்பல் நேற்று (ஏப்ரல் 09) ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. வருகைத்தந்த குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

எகெபொனோ எனும் கப்பல் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின் , தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் கடற்படை செயல்பாடுகளின் கடற்படை பணிப்பாளர் கொமடோர் சன்ஜிவ டயஸ் ஆகியோர் உட்பட தெற்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள், கடலோர காவல்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் அங்கு கண்காணிப்பு பயணங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் யுசி ஹேனோ அவர்கள் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை சந்தித்தார். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இரு நாள் விஜயத்தின் பின் இன்று குறித்த கப்பல் தாயகம் திரும்ப உள்ளது.