கடற்படையின் 401 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திபிரியாவ கிராமத்துக்கு வழங்கப்பட்டது
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி நிகவெரடிய திபிரியாவ கிராமத்தில் கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 350 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவின் படி சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் இலங்கை கடற்படை இனைந்து சிறுநீரக நோய் ஆபத்தான 12 மாவட்டங்களை உள்ளடக்கி மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுகின்றன. மேலும் 2015 ஆம் ஆன்டில் இருந்து இது வரை 401 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் 2018 ஆன்டில் 53 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் நிருவப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கையில் இருந்து சிறுநீரக நோயை நீக்குவதற்கான தேசிய பணியின் ஒரு பங்களியான இலங்கை கடற்படை, சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியுடன் இனைந்து சிறுநீரக நோய் ஆபத்தான மாவட்டங்களை உள்ளடக்கி எதிர்காலத்திலும் மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சமூக சேவைகள் மேற்கொள்ளபடவுள்ளதாக குறிப்பிடத்தக்கது.