27 இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 27 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (ஏப்ரல் 11) இலங்கை கடற்படையின் உதவியுடன் இடம்பெற்றது.

குறித்த 27 மீனவர்களும் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இலங்கைக்கு சொந்தமான காரைநகர் மற்றும் மன்னார் கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. குறித்த இந்திய மீனவர்கள் மீன்டும் ஒப்படைப்பு பணிகள் காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நடைபெற்றது. குறித்த நடவடிக்கைக்காக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சீஜி 401 மற்றும் 402 கப்பல்கள் கலந்துக்கொன்டமை குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் இன்று இந்திய கடலோர காவல்படையின் 'ரானி கயிதிந்லியு' கப்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.