இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்
 

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் இன்று (ஏப்ரல்16) இடம்பெற்ற பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இன் நிகழ்வுக்காக கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, கடற்படையின் பணிப்பாளர் நாயகங்கள், இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் அநில் போவத்த ஆகியோர் உள்ளிட்ட கடற்படை தலைமையகத்தின் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மரபுகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து கடற்படை கட்டளைகறும் குறித்து கடற்படை கப்பல்கள், படகுகள் மற்றும் நிருவனங்களில் புது வருட நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கடற்படையினர் மிகவும் உற்சாகமாக பங்கேற்றனர். மேலும் கடந்த ஆண்டில் போன்ற இந்த ஆண்டிலும் புது வருட நிகழ்வுகளுக்கு இனையாக சுதந்திர தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட்ட 2018 சூரிய விழா இலங்கை கடற்படையுடன் இனைந்து நெடுந்தீவு, திருகோணமலை, அம்பாந்தோட்டை பகுதிகளிலுள்ள கடற்படை முகாம்களில் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் சயுரவில் மிக கவர்ச்சியாக இடம்பெற்றது.