சட்டவிரோதமான வழிமுறைகள் பயன்படுத்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லைக்குல் சட்டவிரோதமான வழிமுறைகள் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 101 மீனவர்கள் மற்றும் 14 படகுகள் கடந்த இரண்டு வாரங்களில் திருகோணமலை துறைமுகம் அருகில் உள்ள கடல் பகுதியில் வைத்து கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

மேலும் மீன் பிடிப்பதுக்காக பயன்படுத்தப்பட்ட 13 சுருக்கு மற்றும் லய்லா வலைகள், அலகொடு வகையில் 6240 கிலோகிராம் மீன்களும் கைது செய்யப்பட்டது. தற்போதைய சட்டம் படி இந்த வகை வலைகளை பயன்படுத்தி கறையோர கடலில் மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் திருகோணமலை கடலில் ஏழு கடல் மைல்களுக்குள் குறித்த வழிமுறை பயன்படுத்தல் இலங்கை குடியரசின் 1996 இலக்கம் 02 ஆம் மீன்வளர்ப்பு மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்திலும் 22.01.2016 திகதி DFAR/FM/AD/13/496 கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கடிதம் மூலம் தடை செய்யப்பட்டது.

குறித்த சந்தேக நபர்கள், படகுகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகதுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தற்போது கிழக்கு கடலில் குறித்த சுருக்கு வலைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பதால் கடற்படை கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவியுடன் கைது செய்யும் நடவடிக்கைகளை விரிவாக்கப்பட்டுள்ளன. அத் துடன் சட்டவிரோதமான வழிகள் மூலம் மீன் வளங்களை வீணடிக்க வேண்டாம் என் கடற்படை தீவின் மீன்பிடி சமுதாயத்திலிருந்து கோருகிறது.