கொமொடோ பயிற்சி - 2018” இல் பங்கேற்க இலங்கை கடற்படை கப்பல் சாகர இந்தோனேசியா நோக்கி பயணம்
 

பலபரிமாணங்களைக் கொண்டமைந்த கடற்படைப் பயிற்சியான “கொமொடோ ” மற்றும் “சர்வதேச கடற்படை மீளாய்வு 2018” ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல் சாகர இன்றையதினம் (ஏப்ரல், 24) பயணமானது. இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக்கப்பலான சாகர, இந்தோனேசியவில் நடைபெறவுள்ள கடற்படை பயிற்சிகளில் இலங்கை கடற்படையினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், கிழக்கு துறைமுகமான திருகோணமலை துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

இலங்கை கடற்படைக் கப்பல் சாகரவுடன் 20 கடற்படை அதிகாரிகள், 04 இடைபயிலுனர் அதிகாரிகள் உட்பட சுமார் 192 பேர்களைக் கொண்ட கடற்படைக் குழுவினர் பயனமாகியுள்ளது.
இன் நிகழ்வுக்கு கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல கொடி கட்டளையின் கொடி அதிகாரி கொமடோர் ஆனந்த குருகே ஆகியோர் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டனர். மேலும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியவர்கள் தன்னுடைய வால்த்துக்களை கப்பலின் கட்டளை அதிகாரி உட்பட ஊளார்களுக்கு தெரிவித்தார். அவர்கள் மே மாதம் 04ம் திகதி இந்தோனேசியாவின் லெம்பார் துறைமுகத்தை சென்றடைவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு நாட்களைக் கொண்ட கொமோடோ பயிற்சி - 2018 ஆனது, லாம்போக் தீவில் மேற்கு நோஸா தென்காராவில் உள்ள லம்பார் துறைமுகத்தில் மே மாதம் 04ம் திகதி தொடங்குகிறது. உலகம் முழுவதிலும் இருந்து 43 கடற்படைகளின் பிரதிநிதிகள் இணைந்து பங்கேற்கவுள்ள இக்கடற்படை பயிற்சியில் 12 முக்கிய செயலமர்வுகள், கலை கலாச்சார நிகழ்ச்சிகள், கடல் கண்காட்சிகள், பொறியியல் சிவிக் செயற்திட்டங்கள் (Encap) மற்றும் மருத்துவ சிவிக் செயற்திட்டங்கள் (Medcap)ஆகியன இடம்பெறவுள்ளன. பயிற்சியின் இறுதி நாளன்று களமுனை பயிற்சிகள் மற்றும் கப்பல் அணிவகுப்பு என்பனவும் இடம்பெறவுள்ளன.