இந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு
 

29 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் நேற்று (மே, 03) இடம்பெற்றது. இவ்வருடாந்த சந்திப்பு காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லைப் பிரேதேசத்தில் இந்திய கடற்படைக்கப்பல் சுமித்ராவில் வைத்து இடம்பெற்றது.

வட மத்திய கடற்படை பிரிவுக்கான கட்டளைத் தளபதி ரியர் எட்மிரல் முதித்த கமகே அவர்களின் தலைமையில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 11 அங்கத்தவர்களைக் கொண்ட உள்ளநாட்டு தூதுக்குழுவினருக்கும், தமிழ் நாடு கடற்படை பிரிவுக்கான கொடி அதிகாரிகளின் கட்டளைத் தளபதி ரியர் எட்மிரல் ஆலோக் பத்நகர் அவர்கள் தலைமையில் ஒன்பது அங்கத்தவர்களைக் கொண்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில், கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் கலந்துகொண்டார்.

இருநாடுகளுக்கிடையேயான நட்புறவினை பலப்படுத்துவதுடன் கடற்படை மற்றும் கடலோர காவற்படையினரின் நடவடிக்கைகளை தயார்நிலையில் வைத்துக்கொள்வதே இச்சந்திப்பின் நோக்கமாகும். மேலும், இங்கு பிராந்திய கடல் சார் பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.