கர்ப்பிணி பெண் மற்றும் 03 மாத குழந்தை கடற்படையினரால் காப்பாற்றபட்டது
 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பொதுமக்களுக்கு இலங்கை கடற்படையின் 54 மீட்பு மற்றும் நிவாரண குழுகள், அவசியமான பொருட்களையும் சேவைகளையும் துரித கதியில் வழங்கி வருகின்றது.

நேற்று (மே 25) திகதி மாலை பத்துனு ஒய பாலம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல வீடுகளில் மற்றும் சிலாபம் புரிச்சிகுழம் பகுதியில் ஒரு வீட்டில் சிக்கிக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட பலரின் உயிர்கள் கடற்படை மீட்பு மற்றும் நிவாரண குழுவினரால் (4RU) காப்பாற்றப்பட்டது.

மேலும் சிலாபம் புரிச்சிகுழம் பகுதியில் வீட்டுக்குள் சிக்கிக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் 03 மாத குழந்தையை காப்பாற்ற டிங்கி படகு மூலம் அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை ஆனால் கடற்படையினர் நீந்து சென்று அவர்கள பாதுகாப்பாக காப்பாற்றினார்கள்.