சட்டவிரோத குடியேறிகள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது
 

இந்தியவில் இருந்து கடல்வழியாக சட்டவிரோதமான முரையில் படகு மூலம் இலங்கைக்கு வந்த 06 பேர் நேற்று (மே 30) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. குறித்த நபர்கள் தலைமன்னர், ஊருமலை பகுதியில் வைத்து ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த வட மத்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

அங்கு மூன்று ஆண்கள் (03), ஒரு பெண் மற்றும் இரன்டு குழந்தைகள்  கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் தலைமன்னார் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கப்பட்டது. அதன் பின் இவர்கள் மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.