உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
 

உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு இனையாக கரையோர சூழல் சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு கடற்படை பங்களிப்பு வழங்கியது. அதன் பிரகாரமாக நேற்று (ஜூன் 05) மேற்கு மற்றும் தென் கடற்படை கட்டளைகள் மையமாக கொன்டு கரையோரங்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பிரகாரமாக நெஸ்லே லங்கா நிருவனம், மட்டக்குலி பொது நூலகமுடன் இனைந்து மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மட்டக்குலி, காகதீவு கரையோர சூழல் சுத்தம் செய்யும் திட்டங்கள் மேற்கொன்டுள்ளனர். இதுக்காக இலங்கை கடற்படையின் 50 பேர், நெஸ்லே லங்கா நிருவனத்தின் 50 பேர், மட்டக்குலி பொது நூலகத்தின் 15 பேர் கழந்துகொன்டனர். மேலும் சேகரிக்கப்பட்ட பொலிதீன், பிலாஸ்டிக் பொதி கடற்படையினரினால் மட்டக்குலி காகதீவில் பராமரிக்கப்படுகின்ற பிலாஸ்டிக் மற்றும் பொலிதீன் மறுசுழற்சி மையத்திற்கு கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் தென் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் சிவில் அமைப்புகள் தென் கடற்படை கட்டளையின் கடற்படையினர்களுடன் இனைந்து கடற்கரைகள் சுத்தம் செய்யும் திட்டங்கள் மேற்கொன்டுள்ளனர். அதன் பிரகாரமாக இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தின் வீர்ர்கள் காலி தெவட நெடுஞ்சாலை ஆரம்பத்திலிருந்து காலி மீன்பிடி துறைமுகம் வரையும் இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் வீர்ர்களால் மஹமோதர வைத்தியசாலையில் இருந்து காலி கோட்டை வரை கடற்கரைகள் சுத்தம் செய்யப்பட்டது.

மட்டக்குலி, காகதீவு பகுதி கடற்கரை சுத்தம் செய்தல்

 

 

 

 

 

 

 

 

 

 

காலி, கடற்கரை சுத்தம் செய்தல்