சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் தென் கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

இலங்கைக்கு வருகை தந்த லெப்டினன்ட் ஜெனரல் சியாஒ தியங்லியாங் (Lieutenant General Ziao Tian Liang) தலைமையிலான சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் நேற்று(ஜூன் 20) தென் கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர். அங்கு இவர்களை கடற்படையின் மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன. குறித்த குழுவினருக்கு சீன பாதுகாப்பு அதிகாரிகள் 24 பேர் உள்ளனர்.

அதன் பிரகு லெப்டினென்ட் ஜெனரல் டிங் லியாங் அவர்கள் தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இன் நிகழ்வுக்காக தென் கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ஹசித கமகே அவர்கள் உட்பட தென் கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள் கழநதுகொன்டனர். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மேலும் லெப்டினென்ட் ஜெனரல் லியாங் அவர்கள் உட்பட அதிதிகள் காலி கோட்டை மற்றும் காலி கோட்டை கடல்சார் அருங்காட்சியத்தின் கன்கானிப்பு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர். இன் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் ஜகத் பிரேமரத்ன, இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் துமிது அபேவிக்கிரம மற்றும் இலங்கையில் சீனத் மக்கள் குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கர்னல் சூ ஜியான்வெய் ஆகியோர் கழந்துகொன்டனர்.