கடற்படை பேஸ்பால் அணி அமெரிக்காவுக்கு விஜயம்
 

அமெரிக்காவில் நிவுஜர்சி பேஸ்பால் சங்கத்தின் ஆணையாளர் லெரி பிரான்க் அவரது அழைப்பின் படி 2015,2017 மற்றும் 2018 ஆண்டுகளில் தேசிய பேஸ்பால் சாம்பியன்ஷிப் வெற்றிப்பெற்ற இலங்கை கடற்படை பேஸ்பால் அணியின் வீர்ர்கள் கடந்த ஜூன் 02 ஆம் திகதி முதல் ஜுன் 10 வரை அமெரிக்காவில் நட்பு பேஸ்பால் போட்டி விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர். 

கடற்படை பேஸ்பால் அணி அமெரிக்கா, நிவுஜர்ச் ப்லுபில்ட் பசர்ட்ச் (Bloomfield Buzzards), பிரன்ச்பர்க் டோடுகஸ் (Branchburg Tortugas)‍, பர்கன் புல்ஸ் (Bergen Bulls) மற்றும் வுட்ர்ஜ் டய்டன்ஸ்  (Wood-Ridge Titans) ஆகிய அனிகளுடன் 04 நட்பு போட்டிகளுக்கு கழந்துகொன்டனர். இப் போட்டிகளில் 03 போட்டிகளின் வெற்றி கடற்படை அணி பெற்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கு கடற்படை பேஸ்பால் வீர்ர்கள் தனது வழக்கமான திறமையை நன்றாக காண்பித்து விளையாடினார்கள். குறித்த வீரர்கள் பகல் இரவு போட்டிகளிலும் கழந்துகொன்டு புதிய அனுபவங்கள் பெற்றார்கள். மேலும் அமெரிக்காவில் பிரதான பேஸ்பால் போட்டிதொடரான Major Baseball League தொடரின் போட்டிக்களும் பார்வைட்டார்கள்.

கடற்பரைடத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவருடைய அறிவுரை படி இயக்குனர் விளையாட்டு கொமடோர் லசந்த கமகே அவர்கள் மற்றும் கடற்படை பேஸ்பால் விளையாட்டு குழு அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் தெற்கு ஆசியா கேட்வே டெர்மினல்ஸ் (பிரைவேட்) லிமிடெட், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், கொழும்பு சர்வதேச கொள்கலன் டெர்மினல்ஸ் ஆகிய நிருவனங்கள் வழங்கிய நிதி பங்களிப்பு காரணமாக சுற்றுலா வெற்றிகரமானதாக குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நிவுயோக் மற்றும் நிவுஜர்சில் வசிக்கும் இலங்கையர்கள் சிறப்பான ஆதரவு வழங்கினார்கள். 

குறித்த விஜயத்துக்காக கடற்படை பேஸ்போல் அணியின் பொறுப்பாதிகாரி கொமான்டர் நிலங்க தர்மரத்ன மற்றும் கடற்படை பேஸ்போல் அணியின் மேலாளர் லெப்டினென்ட் கமாண்டர் ரொஷான் கடுவாவல அவர்கள் கழந்துகொன்டார்.