கடற்படையினால் உலக நீரியல் தினம் அனுஷ்டிப்பு
 

இலங்கை கடற்படையின் நீரியல் அளவைப் பிரிவினரினால் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற 2018 ஆண்டுக்கான உலக நீரியல் தின வைபவம் நேற்று (ஜூன், 21)கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.

இதன்போது, கடற்படையின் நீரியல் அளவைப் பிரிவின் வலைத்தளம் www.hydro.navy.lk உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் அதன் முதலாவது மின்னணு கப்பல் விளக்க அட்டவணையும் வெளியிடப்பட்டது.

வெலிகம குடாவின் மின்னணு கப்பல் விளக்க அட்டவணை மூலம் எதிர்காலத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு உறுதுணையாக அமையும் என கடற்படையின் நீரியல் அளவை எதிர்பார்க்கிறது.

இந்நிகழ்வில், "காரைநகர் சேனல் மற்றும் அணுகுமுறைகள்" மற்றும் "கச்சதீவு" ஆகிய இரண்டு பாதுகாப்பு கடல் வரைபடங்கள் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம், நாரா அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.