பாதுகாப்பு சேவைகள் படகுப்போட்டி தொடரில் ஒட்டுமொத்த வெற்றி கடற்படைக்கு
 

பாதுகாப்பு சேவைகள்  படகு போட்டித்தொடர் 2018 கடந்த ஜூன் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தியவன்னா ஒய பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது. குறித்த தொடருக்காக முப்படையின் பல விழயாட்டு வீர வீராங்கனிகள் பங்கு பெற்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டித் தொடருக்காக ஆண் பிரிவின் கடற்படை பிரதிநிதித்துவப்படுத்திய வீர்ர்கள்  K1 200M, K1 500M, K2 500M, C1 500M  மற்றும் டிரகன் படகு பிரிவுகளில்  நடந்த போட்டிகளில் முதலாமிடம் பெற்றுள்ளனர்.பெண் பிரிவின் கடற்படை பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனிகள் K 1 200 M , K 1 500 M மற்றும் K 1 1000 M ஆகிய பிரிவுகளில் முதலாமிடம் பெற்று  இப் போட்டிதொடரில் ஒட்டுமொத்த வெற்றி கடற்படை பெற்றுள்ளது. மேலும் போட்டிதொடரில் சிறப்பான படகு வீர்ர்களாக கடற்படை வீர்ர் ஆர்.பி.டி.பி.ஐ விஜேரத்ன மற்றும் பென் வீராங்கனி கே.டப் வெலிகல விருது பெற்றார்கள்.

கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, பரிசளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்குபெற்றார். இன் நிகழ்வுக்கு முப்படையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் கழந்துகொன்டதாக குறிப்பிடத்தக்கது.