வடக்கு கடற்படையினரால் எழுவைதீவுப்பகுதியில் மருத்துவ சிகிச்சை முன்னெடுப்பு
 

அண்மையில் (ஜூன், 24) யாழ் மாவட்டத்தில் எழுவைதீவுப்பகுதியில் மற்றுமொரு மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவருடைய வழிகாட்டலின் மற்றும் அறிவுறுத்தல்களின் கீழ் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இவ் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் புனித தோமஸ் ரோமன் கத்தோலிக் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வடக்கு கடற்படை கட்டளையக மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் அவர்களிடையே காணப்பட்ட நாட்பட்ட மற்றும் தொற்றா நோய்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் சிகிச்சையின் போது கள ஆய்வுகளை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்கியதன் மூலம் இப்பிரதேசத்தை சேர்ந்த சுமார் 253 பேர் பயன் அடைந்துள்ளனர்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இப்பொதுமக்கள் நலன்புரி சேவைக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்துணவு விநியோகம் ஆகியவற்றுக்கான உதவிகளை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை திரிபோஷா நிறுவனம் ஆகிய வழங்கியுள்ளன.