கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சோமாலி மீனவர்கள் மூவரை (03) கடற்படையினரால் மீட்பு
 

காலி கலங்கரை விளக்கத்தில் இருந்து 115 கடல் மைல்கள் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த சோமாலி மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படை கப்பல் நன்திமித்ரவின் வீரர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.  

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம் மூலம் தத்தளித்துக் கொண்டிருந்த சோமாலி மீனவர்கள் மூவர் மற்றும் கப்பல் தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கடற்படைத் தலைமையகத்தில் அறிவுரை படி உடனடியாக இலங்கை கடற்படை கப்பல் நன்திமித்ர நேற்று (ஜூலை 04) 05,20 மணிக்கு கடற்படை மருத்துவ உதவியாளர் குழுவினருடன்  சோமாலி மீனவர்கள் மற்றும் கப்பல் உள்ள இடத்துக்கு சென்றனர்.   

இன்று (ஜூலை 05) திகதி மீன்பிடிக் கப்பல் கிட்டே நெருங்கிய இலங்கை கடற்படை கப்பல் நன்திமித்ர அங்கு உள்ள ஆபத்தான சூழ்நிலையில் உள்ள மீனவர்களுக்கு கடற்படை மருத்துவ உதவியாளர் குழு மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது, சுமார் 03.45 மணிக்கு மீனவர்களும் அவர்களின் படகும் காலி துறைமுரைத்திற்கு பாதுகாப்பாக கொன்டுவந்து மருத்துவ சோதனைக்குப் பின்னர் காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.