மாலத்தீவு கடலோர காவல்படையின் ‘ஹுராவி’ கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை .
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு மாலத்தீவு கடலோர காவல்படையின் ‘ஹுராவி’ கப்பல் இன்றையதினம் (ஜுலை 07) இலங்கைக்கு வருகைதந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன.

கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரியான மேஜர் முகம்மது ஜான்ஷார்ட் மற்றும் இலங்கையின் மாலத்தீவு உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் அஹ்மத் கிஹாஸ் ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை சந்தித்தனர். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு வருகைதந்த இக் கப்பல் எதிர்வரும் ஜூலை 9 திகதி தீவை விட்டு வெளியேற உள்ளது.