கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு கடற்படையினர் உதவி
 

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய வருடாந்த 'பாத யாத்திரை' ஆரம்பமாகியுள்ளது. இவ்வாண்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கதிகாமத்திற்கான புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர். வருடாந்தம் இடம்பெறும் இப்பாத யாத்திரைக்கு நெடுந்தூரம் பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவருடைய வழிகாட்டலின் கிழ் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தின் வீர்ர்கள் ஜூலை 04 ஆம் திகதி இருந்து பல்வேறு முன்னெடுப்பபுக்களை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் படையினரால் யாத்ரீகர்கள் பயணத்தின் போது இளைப்பாறி, ஒய்வுபெற்றுச் செல்வதற்கான விஷேட ஓய்விடங்களை பல அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போத்தல்கள் என்பனவும் வழங்கப்படுகின்றன. அத்துடன் அவர்களின் பயணப்பாதையின் பல இடங்களில் யாத்ரீகர்கள் தமது தாகத்தை தீர்த்துக்கொள்ளும் வகையில் நீர்தாங்கிகள் பல நிலை நிறுத்தப்பட்டுள்ளன.